• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மெர்சலை போல் சர்காரை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்!

மெர்சலை போல் சர்காரை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்!

சர்கார் பட போஸ்டர்

சர்கார் பட போஸ்டர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்கார் படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் பாடலை மட்டும் வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் இசை வெளியீடு அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் தற்போது கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பங்களுள் ஒன்றான சர்காரை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

     முன்னதாக விஜய், ஏ.ஆர். ரஹ்மான், விவேக் கூட்டணியில் உருவான மெர்சல் பட ஆடியோ உரிமையை சோனி நிறுவனம்தான் வாங்கியிருந்தது. மெர்சல் பாடல் ஹிட் அடித்த நிலையில் தமிழ் சினிமாவில் இதுவே அதிக பார்வையாளர்கள் பார்த்த ஆல்பம் என்று சோனி நிறுவனம்  தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: