ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

50 ஆசிய பிரபலங்களில் முதலிடம்.. கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு புகழ் அங்கீகாரம்..

50 ஆசிய பிரபலங்களில் முதலிடம்.. கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு புகழ் அங்கீகாரம்..

சோனு சூட்

சோனு சூட்

மனிதநேய முயற்சிகளுக்காக உலகின் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் சோனு சூட். இந்த பட்டியலை இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட Eastern eye செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    கொரோனா காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் உதவிய  பாலிவுட் நடிகர் சோனு சூட், அவரது மனிதநேய முயற்சிகளுக்காக உலகின் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலை இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட Eastern eye செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில், உலக மக்களுக்கு தங்கள் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மூலமாக நேர்மறையான எண்ணத்தைத் தரும் கலைஞராக சோனு சூட் இடம்பிடித்துள்ளார்.

    ”தொற்று நோய் பரவத் தொடங்கியபோது, நாட்டு மக்களுக்கு உதவுவது எனது முடிவெடுத்தது ஆர்மார்த்தமான முடிவு” என சோனு சூட் தெரிவித்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தை ஏற்பதாகவும், மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த அங்கீகாரப் பட்டியலை அஸ்ஜத் நசீர், “கல்வி, கொரோனா காலத்தில் செய்த உதவிகள், அறுவை சிகிச்சைகளுக்கான உதவி, கல்விக்கட்டணங்கள், விவசாயிகளுக்கான உதவி என கணக்கிலடங்கா உதவிகளைச் செய்திருக்கும் சோனு, இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு முழு தகுதியடையவர் எனவும், இது பெருமைக்குரியது” எனவும் தெரிவித்துள்ளார்.

    50 நபர்களின் இந்த பட்டியலில், ப்ரியங்கா சோப்ரா, நடிகர் பிரபாஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Gunavathy
    First published:

    Tags: Migrant workers, Sonu sood