சோனு சூட் தையல் கடை! - வைரலாகும் வீடியோ

sonu sood

சோனு சூட் தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

 • Share this:
  பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். போக்குவரத்து தொடர்பான உதவிகள், கல்வி உதவித்தொகை வழங்குதல், மொபைல் டவர் அமைத்து கொடுத்தல் என பல வகைகளிலும் தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார்.

  சோனு சூட் மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், மக்களிடம் இருந்த அவரது புகழ் இன்னும் அதிகரித்தது. பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சோனு சூட் தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.  சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணி தைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோவின் கேப்ஷனில், ``சோனு சூட் தையல் கடை. இங்கே இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும். ஆனால், அது அரை கால் சட்டையாக மாறவும் வாய்ப்பு உள்ளது” என்று கேலியான தொணியில் பதிவிட்டுள்ளார். சோனு சூட்டின் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Ram Sankar
  First published: