முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபுதேவாவை இயக்கும் பிரபல பாடலாசிரியர்..

பிரபுதேவாவை இயக்கும் பிரபல பாடலாசிரியர்..

பிரபுதேவா

பிரபுதேவா

பாடலாசிரியர் பா.விஜய் மீண்டும் படம் இயக்குகிறார். அந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வாலி, வைரமுத்துக்குப் பிறகு மாஸ் பாடலாசிரியராக உருவானவர் பா.விஜய். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்கு பாத்திரமாகி அவரால் வித்தக கவிஞர் என பாராட்டப்பட்டவர். பாடல் எழுதுவதில் உச்சத்தில் இருந்த நேரம், விதி நடிப்பு ஆசையின் மூலம் வந்தது. ஞாபகங்கள் என்ற படத்தில் நாயகனாக பா.விஜய் நடித்தார். பிறகு கலைஞர் கதை, வசனத்தில் இளைஞன் என்ற படம். ரஷ்ய நாவலாசிரியர் மாக்சிம் கார்கியின் தாய் நாவலை தமிழுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட கதை இளைஞன். ஆனால், படம் போகவில்லை. பிறகு ஸ்ட்ராபெரி என்ற படத்தை இயக்கி, நடித்தார். எல்லாமே தோல்வி

நடிப்புக்கு வந்ததும் பாடல் எழுதுவதை குறைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் பா.விஜய் என்ற பெயர் தமிழ் சினிமாவிலேயே இல்லாமல் ஆனது. சுதாகரித்துக் கொண்டவர் சமீபமாக மீண்டும் பாடல்கள் எழுத ஆரம்பித்தார். ஆனால், அவரது ஆசை அதையும் தாண்டி இருந்திருக்கிறது

Also read : மோகன்லால், மீனாவுக்கு விருந்தளித்த ரஜினியின் நண்பர் மோகன் பாபு..

எம்எஸ் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தை பா.விஜய் இயக்குகிறார். பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கின்றனர். இதன் பூஜை நேற்று நடந்தது. பிரபுதேவா இயக்கத்தை கைவிட்டு முழுநேர நடிகராகியிருக்கிறார் பொய்க்கால் குதிரை, கல்யாண் இயக்கத்தில் ஒரு படம், இப்போது பா.விஜய் இயக்கும் படம் என அவர் ரொம்ப பிஸி

பா.விஜய்யின் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Prabhu deva