Home /News /entertainment /

ஜான்வி கபூரின் ஆடை குறித்து பேசிய கத்ரினா... பதில் அளித்த சோனம் கபூர்!

ஜான்வி கபூரின் ஆடை குறித்து பேசிய கத்ரினா... பதில் அளித்த சோனம் கபூர்!

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகைகள் ஜிம்-க்கு சென்று வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

  • News18
  • Last Updated :
    ஜான்வி கபூரின் ஆடை குறித்து கத்ரினா கைஃப் பேசியிருந்த நிலையில், சோனம் கபூர் ஜான்வி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    நடிகைகள் அனைவரும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்-க்கு செல்வது வழக்கம். குறிப்பாக பாலிவுட் நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஜிம்-க்கு சென்று வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம். குறிப்பாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்படும்.



    இந்நிலையில் நடிகை கத்ரினா கைஃப் பேட்டி ஒன்றின் போது ஜான்வி கபூர் உடை குறித்து பேசிய கருத்து வைரலாகியுள்ளது. பேட்டியின் போது அவரிடம் ஜிம்-க்கு போகும் நடிகைகளில் யார் சரியாக உடை அணிவதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை கத்ரினா கைஃப், ஜான்வி கபூர் பெயரை கூறியுள்ளார். அதில். ‘ ஜான்வி கபூர் அணிந்து வரும் உடைகளை பார்த்து கவலைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    கத்ரினா கைஃபின் இந்தக் கருத்துக்கு நடிகை ஜான்வி கபூர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் நடிகை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராமில். ‘ஜான்வி எந்த உடை அணிந்தாலும் சிறப்பாக இருப்பாள்’ என்று பதிவிட்டுள்ளார்.



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Janhvi kapoor, Katrina Kaif, Sonam Kapoor

    அடுத்த செய்தி