உடை மாற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

உடை மாற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹா

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹா வெளியிட்டுள்ள வீடியோ இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது.

  • Share this:
பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அண்மையில் தனது கனவு இல்லத்தை கட்டி அதில் குடிபெயர்ந்தார்.

நடிகை சோனாக்சி சின்ஹா மும்பை பாந்த்ரா பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றை அண்மையில் வாங்கியுள்ளார் . தனது கனவு இல்லம் குறித்து பேசிய அவர், நான் நடிகையான பிறகு எனக்கான சொந்த உழைப்பில் ஒரு வீடு வாங்கி வேண்டும் என்பது எனது கனவு. அது தற்போது நனவாகியுள்ளது. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என கூறியுள்ளார். தற்போது மும்பையில் ஜூஹூ பகுதியில் வசித்து வரும் சோனாக்சி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

இன்ஸ்டாவில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களின் லைக்ஸ் மட்டும் அல்லாது மனங்களையும் வென்றுள்ளார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள உடை மாற்றும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதில், நிமிடத்திற்கு ஒரு முறை வண்ணங்களில் உடையை மாற்றி விட்டு ஸ்டைலிஷாக உள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: