“பாலிடிக்ஸ் செய்கிறார்கள்”... செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் புகார் - வீடியோ

சீரியல் நடிகர் கார்த்தி

சின்னத்திரையில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்திக் ராஜ், தன்னை திரைப்படங்களில் நடிக்க விடாமல் சில முயற்சிப்பதாக பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
நடிகர் கார்த்திக் ராஜ் சின்னத்திரையில் நன்கு அறிமுகமான இளம் நடிகராக வலம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான அவர், அடுத்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆஃபீஸ்’ தொலைக்காட்சியில் லீட் ரோலில் நடித்தார். இவரும் ஸ்ருதி ராஜூம் இணைந்து நடித்த காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, தொடரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்தார்.

இந்த சீரியலிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த அவர், திடீரென சீரியலில் இருந்து விலகினார். 800 எபிசோடுகளுக்கும் மேல் நடித்த கார்த்திக் ராஜ் திடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமும் கூறப்படவில்லை. கார்த்திக்ராஜ் படத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக கார்த்திக் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் நடிக்க இருந்த புரொஜெக்டுகளில் சிலர் பின்வேலைகள் பார்த்து தடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எல்லோருக்கும் வணக்கம், இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றி அப்டேட் போட வேண்டும் என காத்திருந்தேன். ஆனால் என்னால் போட முடியவில்லை. என்னை எந்த ப்ராஜெக்ட்டும் பண்ண விட மாட்டேங்குராங்க. நிறைய பாலிடிக்ஸ் செய்து கொண்டிருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : இளையராஜா இசையில் புதுப்படத்தில் கமீட் ஆன சீரியல் நடிகர் பிரஜின்..

தொடர்ந்து பேசிய அவர், " நான் பண்ண வேண்டிய ப்ரொஜெக்ட்டுக்குள் புகுந்து, சில பின் வேலைகளை பார்த்து, நான் அதை பண்ண முடியாதபடி பண்ணிட்டாங்க. நான் படம் பண்ண கூடாதுனு சில பேர் விருப்பப்படுறாங்க. ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் 'உன்னால் முடிந்தால் படம் பண்ணி காட்டு' என சவால் விட்டு இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படம் பண்ணி காட்ட முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டூடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். அடுத்த ப்ராஜெக்ட் அதில் தான் பண்ண போகிறேன்.
பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு என்னிடம் background இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும் தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாக கேட்கிறேன். சின்னதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, உங்களால் என்ன முடியுமோ அதை அனுப்புங்க. நீங்கள் ஆதரவளித்தால் தான் இது முடியும்" எனக் கூறியுள்ளார். பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: