பிக்பாஸ் வீட்டில் மொபைல் பயன்படுத்தினரா சோம்? இணையத்தில் எழும் கேள்விகள் (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் மொபைல் பயன்படுத்தினரா சோம்? இணையத்தில் எழும் கேள்விகள் (வீடியோ)

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் பேசும் பொழுது சோம் மொபைல் பயன்படுத்தியுள்ளார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். கடைசியாக தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை செய்தியாக வாசித்துவிட்டுச் சென்றார் அனிதா.

100-வது நாளை நெருங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்று செல்ல போட்டியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர் . இதனிடையே போட்டியாளருள் ஒருவரான சோம், கமல்ஹாசன் பேசும் பொழுது மொபைல் பயன்படுத்தியுள்ளார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்பது பிக்பாஸ் விதிகளில் ஒன்று. இந்நிலையில் சோம் மொபைல் பயன்படுத்துவது போல் இணையத்தில் வைரலாகும் வீடியோவிற்கு இணையவாசிகள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

  

சிலர் சோம் தனது வேட்டியில் உள்ள சாம்பார் கரையை அகற்றுகின்றார். அது பார்ப்பதற்கு மொபைல் பயன்படுத்துவது போன்று தோன்றுகின்றது எனவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் டிவி ரிமோட்டில் சத்தத்தை அதிகப்படுத்துகின்றார் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: