HOME»NEWS»ENTERTAINMENT»som sekhar evicted from bigg boss house bigg boss grand finale hotstar vijay tv scs

பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டாரா?

தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு இந்நிகழ்ச்சி விஜய் டிவி-யிலும், ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டாரா?
சோம் சேகர்
  • Share this:

ரம்யா பாண்டியனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. அதிலிருந்து தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு இந்நிகழ்ச்சி விஜய் டிவி-யிலும், ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், ஆரி, சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய 5 பேரும் வீட்டில் இருந்தனர். இதில் 5-வது இடம் பிடித்து, ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்னொருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது பிக் பாஸ் சீசன் 4-ல் நான்காம் இடம் பிடித்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. ரம்யாவையும், சோமையும் இணைத்து ஒரு மெல்லிய காதல் கிசு கிசு ரசிகர்களிடம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: