பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் ரம்யாவிற்கு சோம் கொடுத்த க்யூட் கிப்ட்!

சோம் சேகர்

தான் ரொம்ப நாட்கள் கொடுக்காமல் வைத்திருந்த சாக்லெட் கவரை ரம்யாவிடம் பரிசளித்தார் சோம்.

 • Share this:
  பிக் பாஸ் இறுதிப் போட்டியிலிருந்து முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறினார் சோம் சேகர்.

  பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் இறுதிப் போட்டியாளர்களின் குடும்பத்தினரும், இந்த சீசனின் மற்ற போட்டியாளர்களும் நேரடி பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

  அவர்களிடம் பிக் பாஸ் அனுபவம் குறித்து கமல் கேட்டறிந்தார். அப்போது கடந்த சீசனின் டைட்டில் வின்னர் முகென் ராவ் பிக் பாஸ் அரங்கத்திற்கு வந்தார். பின்னர் இந்த சீசனின் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையோடு, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார் முகென். அவர்களிடம் கப்பை காட்டிய முகென், தன் மூலமாக சில டாஸ்க்குகளை பிக் பாஸ் செய்ய சொன்னதாகக் கூறினார்.

  ஆக்சஸ் கார்டுகளைக் கொடுத்து இதில் யாருடைய கார்டு வேலை செய்கிறதோ, அவர்கள் தன்னுடன் வர வேண்டும் என்றார். வரிசையாக ஒவ்வொருவரும் ஆக்சஸ் செய்ய யாருடைய கார்டும் வேலை செய்யவில்லை. பின்னர் ஒவ்வொருவரையும் மாஸ்க் மாட்டச் செய்து இன்னொரு டாஸ்க்கையும் செய்தார். அப்போதும் யாருடைய பெயரும் வரவில்லை. இதனால் முகென் தங்களை டென்ஷன் படுத்துவதாக படபடத்துப் போனார்கள் இறுதிப் போட்டியாளர்கள் 5 பேரும்.

  சிரித்து சமாளித்த முகென், இப்போது சீரியஸான டாஸ்க், இந்த கார்டில் யாருடையது ஸ்கேன் ஆகிறதோ, அவர்கள் என்னுடன் வரவேண்டும் என்றார். வரிசையாக போட்டியாளர்கள் தங்களுடைய கார்டை ஸ்கேன் செய்தனர். அப்போது, சோமின் கார்டு ஸ்கேன் ஆனதால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆனார். அவரை பிக் பாஸ் அரங்கத்துக்கு அழைத்துச் சென்றார் முகென்.

  முன்னதாக தான் ரொம்ப நாட்கள் கொடுக்காமல் வைத்திருந்த சாக்லெட் கவரை ரம்யாவிடம் பரிசளித்தார் சோம். அதற்கு நன்றி சொன்னார் ரம்யா. பின்னர் ’இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரில’ என பாலாவிடம் சொன்னார். ‘2 மாசம் அந்த சாக்லெட்ட சாப்பிடாம பத்திரமா வச்சிருந்தான்’ என பாலா கூற, ‘அப்படியா’ என்ற ரம்யா, ‘இதுவரைக்கும் எவ்ளவோ கிஃப்ட் வந்திருக்கு, இது ரொம்ப கியூட்டானது’ என்றார்.

  பின்னர் அரங்கத்திற்கு வந்த சோமிடம் அவரது அனுபவம் குறித்து கேட்டார் கமல். ’அன்பு ஜெயிக்கும் என்ற சோம், 10 வருமா இந்த ஃபீல்டுல இருக்கேன். திடீர்ன்னு ஃபோன் பண்ணி சேனல்ல கூப்பிட்டதும் ஆடிஷனுக்கு வந்தேன். அடுத்த 2 நாள்ல இங்க வரணும்ன்னு அவங்க சொன்னாங்க. நா பிக் பாஸ் போறேன்னு நிறைய பேர் கிட்ட சொன்னேன். பட் நான் அதிகமா 40 நாள் தான் தாக்கு பிடிப்பேன்னு எல்லாரும் சொன்னாங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்கிறது, ஃபைனலிஸ்டா வந்துட்டேன். இந்தா வச்சிக்கோ’ என்றார். பின்னர் அவரது பயண வீடியோ ஒளிபரப்பப்பட்டது. தனது அழகிய தருணங்களைப் பார்த்து மகிழ்ந்த பின் சக போட்டியாளர்களுடன் அமர்ந்தார் சோம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: