• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mr & Mrs சின்னத்திரையில் இருந்து விலகிய தம்பதி - ஏன் தெரியுமா?

Mr & Mrs சின்னத்திரையில் இருந்து விலகிய தம்பதி - ஏன் தெரியுமா?

Mr & Mrs சின்னத்திரை

Mr & Mrs சின்னத்திரை

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில எபிசோடுகளாக மணி - ஷோபியா தம்பதியை பார்க்க முடியவில்லை. 3 ஜோடிகள் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் ஏன் பங்கேற்கவில்லை? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

  • Share this:
மிஸ்டர் & மிஸ் சின்னத்திரை சீசன் 3ல் இருந்து தற்காலிகமாக மணி - ஷோபியா தம்பதி விலகியுள்ளனர்.

விஜய் டீவி ரியாலிட்டி ஷோவுக்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என்று கூறிவிடலாம். புதிய கான்செப்டை உருவாக்கி, அதனை வெற்றிகரமான ஷோவாக மாற்றுவதில் விஜய் டீவிக்கு நிகர் யாருமில்லை. அந்தவரிசையில் அண்மைக்காலத்தில் இணைந்திருப்பது குக் வித் கோமாளி மற்றும் Mr & Mrs சின்னத்திரை. இரண்டு ஷோக்களும் மெஹா ஹிட் அடித்துள்ளன.

 

குக் வித் கோமாளி 2 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. Mr & Mrs சின்னத்திரையின் 3வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில், குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சின்னத்திரை ஸ்டார்களான யோகேஷ் – நந்தினி, வேல்முருகன் – காலா, யுவராஜ் – காயத்ரி, மணிகண்டன் – சோபியா, படவா கோபி தம்பதி என என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Also read... "அன்பு மனைவிக்கு நன்றி" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு!

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில எபிசோடுகளாக மணி - ஷோபியா தம்பதியை பார்க்க முடியவில்லை. 3 ஜோடிகள் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் ஏன் பங்கேற்கவில்லை? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். சுமார் 3 வாரங்களுக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, மணி - சோபியா தம்பதி, மிஸ்டர் & மிஸ் சின்னத்திரை ஷோவில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர். கடந்த சில வாரங்களாக நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்காததால், விலகியிருக்கலாம் என அனைவரும் கூறி வந்த நிலையில், அதனை சோபியா உறுதிபடுத்தியுள்ளார்.



இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்துள்ள அவர், மிஸ்டர் & மிஸ் சின்னத்திரை ஷோவில் பங்கேற்காதது குறித்து பலரும் அக்கறையுடன் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உடனடியாக பதில் கொடுக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள அவர், உடல் நிலை சரியில்லாததால், தற்காலிகமாக ஷோவில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார். விரைவில் வைல்டு கார்ட் சுற்று நடைபெற இருப்பதால், அதில் தாங்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்போம் என்றும் ஷோபியா தன்னுடைய விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.



ஒருவழியாக, மணிகண்டன் - ஷோபியா விலகியதற்கான காரணத்தை ரசிகர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மணிகண்டன், வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார். அவருக்கு சின்னத்திரையில் ஏற்கனவே அறிமுகம் இருப்பதால், இந்த ஷோவில் மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: