Home /News /entertainment /

சினேகன் பிக் பாஸ் வீட்டில் போராட... அவர் மனைவி சமீபத்தில் செய்துள்ள காரியத்தை பாருங்களேன்!

சினேகன் பிக் பாஸ் வீட்டில் போராட... அவர் மனைவி சமீபத்தில் செய்துள்ள காரியத்தை பாருங்களேன்!

snegan kaniga

snegan kaniga

நடிகை கன்னிகா ரவிக்கு பெரிய அளவிலான அறிமுகம் தேவை இல்லை. பிரபல சினிமா பாடலாசிரியர் ஆன சினேகனை திருமணம் செய்த பிறகு இவருக்கு கிடைத்த பிரபலத்தன்மையும், விமர்சனங்களும் - வேற லெவல்!

  திருமணம் ஆன சில மாதங்களிலேயே பாடலாசிரியர் சினேகன் விஜய் டிவியின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே இந்த புதுமண தம்பதிகள் முதன் முறையாக பிரிகிறார்கள் என்கிற செய்தி தலைப்புகள் ஆங்காங்கே தலை தூக்கியது.

  சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு, அவர் போட்டிக்காக கிளம்பும் போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்து, தான் பிரிவால் வாடுவதை வெளிப்படுத்தி இருந்தார் அவரது மனைவி கன்னிகா ரவி. இதற்கிடையில், கன்னிகா ரவி தனிமையை சமாளிக்க 'சோலோ'வாக ஒரு ட்ரிப் அடித்துள்ளார். அவர் மேற்கொண்ட பயணம் குறித்த வீடியோ கிளிப்களை ஒரு முழு வீடியோவாக தொகுத்து, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தும் உள்ளார்.

  நினைவூட்டும் வண்ணம், விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1-இல் கலந்துகொண்டு எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ, அதே அளவிற்கு - "கட்டிப்பிடி சினேகன்" போன்ற மிகவும் மோசமான விமர்சனங்களையும் சந்தித்தார், சினேகன். பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கையோடு தான் காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நடிகர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆன கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

  ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன குக் வித் கோமாளி கனி.. என்ன காரணம் தெரியுமா?


  சினேகன் மற்றும் கன்னிகா ரவிக்கு பெரிய அளவிலான வயது வித்தியாசம் இருந்ததால், பலரும் இந்த ஜோடியை கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கினர். இருந்தாலும் கூட, ரசிகர்கள் இந்த காதல் ஜோடியை ஒரு இன்ஸ்ப்ரேஷனாகவே பார்த்தும், பாராட்டியும் வருகின்றனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Kannika Ravi (@kannikaravi)


   

  பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக வந்துள்ள சினேகன் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார் மற்றும் ஒரு கடுமையான போட்டியாளராகவும் நீடித்த வண்ணம் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சினேகன் கண்டிப்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் வரை வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் இவர் தான் டைட்டில் வின்னர் என்றும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். மறுகையில் சினேகனின் மனைவி கன்னிகா ரவி மிகுந்த தனிமையில் வாடி இருப்பார் போல!

  முன்னதாக கன்னிகா ரவி, "தன் கணவர் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றதில் இருந்து படையப்பா திரைப்படத்தில் வில்லியாக வரும் நீலாம்பரி எப்படி கல்யாண கேசட்டை மீண்டும் மீண்டும் பார்ப்பாரோ, அதே போலவே நான் வீட்டில் இருந்தபடியே, 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் லைவ் ஷோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது தனது தோழி ஒருவருடன் நடிகை கன்னிகா ரவி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கன்னிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, "இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை தேடி எனக்காக இரண்டு நாட்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Entertainment

  அடுத்த செய்தி