எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் `மான்ஸ்டர்’ : மோஷன் போஸ்டர் வெளியீடு

ப்ரியா பவானி சங்கர் | எஸ்.ஜே.சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
    எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தின் பெயரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    `ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு `மான்ஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் எலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓர் எலி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

     முன்னதாக நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒருநாள் கூத்து திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sheik Hanifah
    First published: