ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வைரலாகும் மான்ஸ்டர் படத்தின் ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ!

வைரலாகும் மான்ஸ்டர் படத்தின் ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ!

ப்ரியா பவானி சங்கர் | எஸ்.ஜே.சூர்யா

ப்ரியா பவானி சங்கர் | எஸ்.ஜே.சூர்யா

மான்ஸ்டர் படம் எலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓர் எலி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் மான்ஸ்டர் படத்தின் ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

`ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு `மான்ஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

https://youtu.be/63bfJ2Hw5dM

இந்தப் படம் எலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓர் எலி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒருநாள் கூத்து திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து வெளியாகவுள்ள மான்ஸ்டர் படம் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also see...

First published:

Tags: Monster Movie, S.J.Surya