நான் பிரியா பவானி சங்கரிடம் காதலை வெளிப்படுத்தினேனா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா

நான் பிரியா பவானி சங்கரிடம் காதலை வெளிப்படுத்தினேனா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா
  • Share this:
நான் பிரியா பவானி சங்கரிடம் காதலை வெளிப்படுத்தியதாக சில முட்டாள்கள் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் இணைந்து மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த ஜோடி இணைந்து ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்திலும் நடித்துள்ளனர். இந்தநிலையில், பிரியா பவானி சங்கரிடம் எஸ்.ஜே.சூர்யா காதலைத் தெரிவித்ததாக செய்திகள் பரவின.

அதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவில், ‘பிரியா பவானி சங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று சில முட்டாள் தவறான செய்திகளைப் பரப்பிவருகிறார்கள். மான்ஸ்டர் திரைப்படத்திலிருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள். அடிப்படையற்ற தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.


Also see:

 
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்