Home /News /entertainment /

சித்தார்த்திடம் மாஸ் காட்டி சிக்கிய ஜி.வி.பிரகாஷ் - சிவப்பு மஞ்சள் பச்சை டீசர் வீடியோ!

சித்தார்த்திடம் மாஸ் காட்டி சிக்கிய ஜி.வி.பிரகாஷ் - சிவப்பு மஞ்சள் பச்சை டீசர் வீடியோ!

சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ்

சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ்

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சித்து குமார் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார். பைக் ரேஸருக்கும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கும் இடையேயான மோதல் டீசரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை வரும் ஜுலை 5-ம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு.



வீடியோ பார்க்க: நடிகர் சங்கத்தின் கதை தெரியுமா?

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Siddharth, G.V.Prakash, Sivappu Manjal Pachai

அடுத்த செய்தி