• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

    சீமராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றும் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடித்துவருகிறார். இதில் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

    இந்த இரண்டு படங்களை அடுத்து இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கும் அடுத்த படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க ஜனவரி மாதம் முதல் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த 3 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது. இந்தப் படம், முழுக்க காதல்கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வீடியோ பார்க்க: 7 பேர் யார் என்று ரஜினி கேட்டது வெட்கக்கேடானது - மதிமாறன் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: