சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

news18
Updated: July 11, 2018, 10:14 PM IST
சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன்
news18
Updated: July 11, 2018, 10:14 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் பொன்ராம்-சிவகார்த்திகேயேன்-சூரி ஆகியோர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் சீமராஜா. இந்த திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இதையடுத்து டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன. சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த திரைபடத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சீமராஜா ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று  இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
Loading...
கிராம பின்னணியில் காமெடி கலந்து குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் வில்லியாக சிம்ரன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் அப்பாவாக நெப்போலியனும் முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, சதிஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படமும் வெற்றிப் படமாக அமையும் என படக்குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...