Home /News /entertainment /

பாரதியின் வரிகளோடு குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் சிவகார்த்திகேயன் : வீடியோ

பாரதியின் வரிகளோடு குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் சிவகார்த்திகேயன் : வீடியோ

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

  • News18
  • Last Updated :
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் `மோதி விளையாடு பாப்பா’ என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

    சீமராஜா படத்தை அடுத்து, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது படங்களுக்கிடையே ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். மோதி விளையாடு பாப்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    இந்தப் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் பள்ளிக் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி சொல்லித் தருகிறார். ஆவணப்படத்தில் ஆசிரியராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னைத் தவறான நோக்கில் தொடுபவர்களை அடையாளம் கண்டு கொள்வது குறித்து பாரதியின் வரிகளோடு பாடம் புகட்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பளித்துள்ளனர்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Child abuse short films, Documentary films, Sivakarthikeyan, Sivakarthikeyan as teacher

    அடுத்த செய்தி