Home /News /entertainment /

Sulthan : சுல்தான் பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணணை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

Sulthan : சுல்தான் பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணணை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சுல்தான் ரெமோ திரைப்படத்தை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது..‘ரெமோ’ படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் ‘சுல்தான்’திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இன்று சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில் இன்று அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் தனது ரசிகர்களுடன் திரைப்படத்தை காண அதிகாலையிலேயேவருகை தந்துள்ளார். திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் மெர்வின் திரையரங்கு உரிமையாளர் AE. ஞானவேல்ராஜா ஆகியோர் முதல் காட்சியை காணவும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

     

     



     

    இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். ரெமோ திரைப்படத்தை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும். கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, பிரபு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

     

     



     

     

    சுல்தான் திரைப்படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கு அவரது நண்பர் இந்த திரைப்படத் திற்கு மலேஷியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் நன்றி நண்பா என ட்வீட் செய்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actor Karthi, Actress Rashmika Mandanna, Sivakarthikeyan

    அடுத்த செய்தி