சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ‘அயலான்’ குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ‘அயலான்’ குறித்த முக்கிய அறிவிப்பு!

அயலான்

விறுவிறுப்பாக இதன் படபிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுநோயால் தடைப்பட்டது.

 • Share this:
  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ படத்தின் படபிடிப்பு முழுமையடைந்திருக்கிறது.

  ’ஹீரோ’ திரைப்படத்தை அடுத்து, ’டாக்டர்’, ‘அயலான்’ ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் ’அயலான்’ படத்தை ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

  Ayalaan Sivakarthikeyan

  விறுவிறுப்பாக இதன் படபிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுநோயால் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் நவம்பர் மாதம் அயலான் படபிடிப்பு தொடங்கியது. 2 மாதங்களாக இடைவிடாது நடந்து வந்த இதன் படபிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

  சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமான இதற்கு கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடைய இன்னும் 10 மாதங்கள் ஆகும். அதனால் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அயலான் வெளியாகும் எனத் தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: