இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் வைரல் க்ளிக்!

படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், நயன் தாரா, ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

news18
Updated: October 23, 2018, 8:17 PM IST
இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் வைரல் க்ளிக்!
சிவகார்த்திகேயன்
news18
Updated: October 23, 2018, 8:17 PM IST
படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜித்து ஜில்லாடி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை படத்தின் இயக்குநர் மறுத்திருந்தார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் போது நயன்தாரா, ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அதை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் இணையத்தில் வைரலாகியுள்ளது.


இந்தப் புகைப்படத்தில் மூவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருக்கின்றனர். இது படத்தில் இடம்பெற்றிருக்கும் அவர்களது கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Watch Video மெரினா புரட்சி படத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள்

First published: October 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...