சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம்!

சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம்!

ஆத்மியா

கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

  • Share this:
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்தி பறவை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆத்மியா. கேரளத்து வரவான இவரது ஹோம்லி லுக் ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து ’போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தில் நடித்த ஆத்மியா அதன் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.

அங்கு ’ஜோசப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தற்போது சமுத்திரக்கனியுடன் இணைந்து ‘வெள்ளை யானை’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஆத்மியா. அதோடு கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை இவர் திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்களது திருமணம் ஜன 25-ம் தேதி கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி, ஜனவரி 26-ம் தேதி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

தற்போது 2 மலையாள படங்களை கைவசம் வைத்திருக்கும் ஆத்மியா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாராம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: