விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் - வைரல் புகைப்படம்

விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

Sheik Hanifah | news18
Updated: October 16, 2018, 6:43 PM IST
விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் - வைரல் புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன்
Sheik Hanifah | news18
Updated: October 16, 2018, 6:43 PM IST
விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி , தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார். சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக மக்கள் செல்வன் 25 என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டு அதற்கான பணிகளை நடத்தி முடித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் விஜய்சேதுபதிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வது நடிகர் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நிகழ்ச்சிக் குழுவினர் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் இருவரும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.See Also:
First published: October 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...