கொரோனா பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

கொரோனா பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் - நடிகர்
  • Share this:
கொரோனா பாதிப்புக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருமானமின்றி தவித்துவருகின்றனர். இந்தநிலையில், பிரதமர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்துவருகின்றனர்.

இந்தநிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் சினிமா தொழிலாளர்களின் சம்மேளமான ஃபெப்சிக்கு நிதியளித்தனர். இந்தநிலையில், கொரோனா பாதிப்புக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.


முன்னதாக தெலுங்கு திரையுலகினர் சார்பில் பவன் கல்யான், மகேஷ் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் முதல்வர் நிவாரண நிதிக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்திருந்தனர். தமிழ் திரையுலகினர் சார்பில் யாரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கவில்லை என்று விமர்சனம் எழுந்திருந்தது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் முதல் நபராக சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளார்.

Also see:
First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading