• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அன்றே செல்வராகவன் சொன்னார்... தனுஷை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்!

அன்றே செல்வராகவன் சொன்னார்... தனுஷை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்!

தனுஷ் - சிவகார்த்திகேயன்

தனுஷ் - சிவகார்த்திகேயன்

  • Share this:
    தனியார் விருது விழா மேடையில் எதிர்நீச்சல் படம் மற்றும் தனுஷ் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

    சமீபத்தில் நடந்த இணையதள ஊடகத்தின் விருது விழாவில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் அவர் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளைப் பெற மேடையேறிய சிவகார்த்திகேயனிடம் திரைத்துறையில் அவரது வெற்றி குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன், “என்னவென்றே தெரியாத துறைதான் எனக்கு சினிமாத் துறை. வெற்றி என்பது நம்முடையது மட்டுமல்ல. நிறைய பேர் சேர்ந்து பார்வையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் கிடைப்பது. சவாலான விசயம். ஒரு பயம் இருக்கும்.

    வெற்றி பெற்றுவிட்டால் அதிக மகிழ்ச்சியும், தோல்வியடைந்தால் தோல்வியும் நிரந்தரம் அல்ல. அடுத்து என்ன என்ற கேள்வி தான் இருக்கும். நான் அதிகம் மகிழ்ச்சியாக இருந்தது கனா திரைப்படம் வெற்றியடைந்த போதுதான். நான் மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும் அது செல்வராகவனுக்குத் தான். எதிர்நீச்சல் படத்தைப் பார்த்த செல்வராகவன், இவன் நல்ல டேலண்ட் என்று சொன்னார். அதை தனுஷ் என்னிடம் கூறினார். அப்போதே எனக்கு பெரிய விருதுகளைப் பெற்ற மகிழ்ச்சி இருந்தது.

    கனா படத்தைத் தயாரித்தது நான் அருண்ராஜா மேல் வைத்த நம்பிக்கை என்று சொன்னார்கள். ஆனால் அது தனுஷ் என்மீது எதிர்நீச்சல் படத்தில் வைத்த நம்பிக்கைதான்” என்றார். அப்போது சிவகார்த்திகேயனின் பேச்சைக் கேட்ட தனுஷ் மற்றும் செல்வராகவன் நெகிழ்ந்து போயினர்.

    மேலும் பேசிய சிவகார்த்திகேயன் , “நம்ம வீட்டுப் பிள்ளை கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய நடிப்பை பார்த்து கண் கலங்கியதாக பலரும் கூறினர். என்னை அப்படி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த 8 வருட சினிமா பயணம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

    கனா படத்துக்கு கிடைத்த விருது எனக்கானது அல்ல. என் நண்பன் அருண்ராஜா காமராஜாவுக்கானது. அடுத்த படம் மிகப்பெரிய நடிகரை வைத்து இயக்குகிறார். இந்த மேடையில் அதை அறிவிக்க முடியாது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: