• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் எப்படி இருக்கு?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் எப்படி இருக்கு?

டாக்டர் திரைப்படம்

டாக்டர் திரைப்படம்

படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

  • Share this:
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாக்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

    விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிவரும் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். திருமணத்திற்கு பெண் பார்க்க வரும் டாக்டரான சிவகார்த்திகேயன் ஒரு குழந்தை கடத்தல் அறிந்து வில்லன் குழுவை துரத்திச் செல்ல நடைபெறும் போராட்டங்கள் இந்த படத்தின் ஒன்லைனாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை முழு நோக்கமாக கொண்டு இந்த திரைப்படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். படத்தின் முதல் பாதி முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என நெல்சன் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

    also read : என்னாச்சு பிக்பாஸ் வீட்டில்? நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகிய திருநங்கை நமீதா மாரிமுத்து..

    யோகி பாபு அர்ச்சனா என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைக்கதைக்கும் நகைச்சுவைக்கும் தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் வழக்கமாக வரும் பாணியில் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அமைதியாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக அமைந்துள்ளது.

    அனிருத் பாடல்கள் ரசிகர்களை திரையரங்கில் ஆட்டம் போட செய்வதுடன் திரை கதைக்கு தேவையான பலத்தையும் சேர்ந்துள்ளதால் டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வேறொரு பரிமாணத்தை வழங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளை திருவிழா கோலமாக்க டாக்டர் திரைப்படம் மாற்றும் என்ற நம்பிக்கை திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்த திரைப்படத்தின் வாயிலாக பிறந்துள்ளது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: