• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

டாக்டர் பட போஸ்டர்

டாக்டர் பட போஸ்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘டாக்டர்’ படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்திருந்தார். இந்நிலையில் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



டாக்டர் படத்தை அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும் படிக்க: 10,000 கி.மீ.க்கும் அதிகமாக பைக்கில் பறந்த அஜித் - நண்பர் வெளியிட்ட சீக்ரெட்

டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: