• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ல தண்ணி வர அர சிரிச்சேன்.. பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘டாக்டர்’

கண்ல தண்ணி வர அர சிரிச்சேன்.. பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘டாக்டர்’

சிவாகார்த்திகேயன் - சங்கர்

சிவாகார்த்திகேயன் - சங்கர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிவுள்ள டாக்டர் திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் நடிப்பில் டாக்டர் படம் நேற்று வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்கிவுள்ளார். யோகி பாபு, அர்ச்சனா, தீபா,டோனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்தில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் இப்படி எதற்கும் பஞ்சமில்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில் அனிருத்தின் இசை வேற லெவலில் இருக்கிறது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் டாக்டர் படத்தை பார்த்துவிட்டு தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் திரைப்படம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த கொரோனா காலத்தில் டாக்டர் திரைப்படம் சிறந்த சிரிப்பு மருந்தாக இருக்கிறது. அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தை கொடுத்த சிவாகார்த்திகேயன், அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. திரையரங்க அனுபவம் மாறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’என்று கூறியுள்ளார்.


    இந்த ட்வீடிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் ‘ முதல் முறையாக சங்கர் சாரிடம் இருந்து வந்த வாழ்த்துக்கள். டாக்டர் திரைப்படத்தை இன்னும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியதற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.


    மேலும் ஷங்கரின் மகளும் ‘டாக்டர் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அற்புதமாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் ‘உங்கள் முதல் படத்திற்கு வாழ்த்துக்கள் கலங்குங்க’ என்று கூறியுள்ளார்.


    இயக்குனர் சுசிந்திரனும் தனது ட்விட்டரில் ‘இன்று மாலை குடும்பத்துட்டன் டாக்டர் திரைப்படம் பார்த்தேன்.சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளித்த இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் சிவகார்த்திகேயன் brother-க்கும் எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


    தொகுப்பாளினி டிடி ‘ இந்த படத்திற்கு சென்றால் நிச்சயமாக என்ஜாய்’ செய்வீர்கள் என்று கூறியுள்ளார்.


    நடிகை குஷ்பு ‘ இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்’ என்று வாழ்த்தியுள்ளார்.


    ஓ மை கடவுளே படத்தின் இயக்குனரான அஸ்வந்த் மாரித்து ‘உருண்டு உருண்டு சிரிச்சென், கண்ல தண்ணி வர அர சிரிச்சேன்.நெல்சன் திலீப்குமார் நீங்க ஒரு அற்புதமான எழுத்தாளர். விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு அற்புதம். யோகிபாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள்’என பதிவிட்டுள்ளார்.


    K13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் ‘டாக்டரின் வெற்றி மிக முக்கியமானது.ஒரு முன்னணி நாயகன் டார்க் காமெடி போன்ற ஒரு ஜானர் செய்வதும்,அது வெற்றி அடைவதும் பல இயக்குனர்,எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் விஷயம்.இதை ஒரு Game Changer-ஆக பார்க்கிறேன்’ எனக் கூறி வாழ்த்தியுள்ளார்.


    பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ‘ ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த படகுழுவினருக்கு வாழ்த்துக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.


    இசையமைப்பாளர் தமன் ‘ரியல் டாக்டர்கள் இரவு பகலாக போராடி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் திரையரங்குகளை குணப்படுத்தி உள்ளது’ என பாராட்டி உள்ளார்.


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: