’டாக்டர்’ படத்தின் நிலை இதுதான் - அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன்

’டாக்டர்’ படத்தின் நிலை இதுதான் - அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

’கேங்ஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

 • Share this:
  'டாக்டர்’ படத்தின் டப்பிங் தொடங்கிவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘டாக்டர்’. தெலுங்கில் ’கேங்ஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர்.  டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசை அனிருத். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் தற்போது டாக்டர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். டப்பிங் ஸ்டூடியோவில் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு, படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  சிறந்த கதைகள்