தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா - நடராஜனை புகழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா - நடராஜனை புகழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Ind Vs Aus

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  • Share this:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகளள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது. மேலும் இன்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் முறையாக களமிறக்கப்பட்டார். முதல் சர்வதேச போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களையும் திணறடித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், “மிகச்சிறந்த முயற்சி நடராஜன். முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடினீர்கள். உங்களை நீல நிற ஜெர்சியில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று குறிப்பிட்டுள்ளார்.சேலம் சின்னப்பம் பட்டியிலிருந்து கிளம்பிய யார்க்கர் மன்னன் நடராஜன். தனது திறமையாலும், கடின உழைப்பாலும் உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தாத கடைகோடி கிராமத்திலிருந்து கிளம்பி சர்வதேச கிரிக்கெட் உலகில் தனது பெயரை உறக்கச்சொல்லியிருக்கிறார். 2017-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தாலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தான் அதிக கவனம் பெற்றார். இதையடுத்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் நனவாகியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: