Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கும் அயலான் பாடல் ரிலீஸ்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கும் அயலான் பாடல் ரிலீஸ்

அயலான்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அயலான் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார்.‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் வேற்றுக்கிரகவாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி இருந்தனர். இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில் இதனிடையே டாக்டர் படத்தை முடித்தார் சிவகார்த்திகேயன்.



இதையடுத்து ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது. இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் விரைவில் லிரிக்கல் வீடியோ வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: