தளபதி 65 இயக்குநரை விஜய் ரசிகர்களிடம் கோர்த்து விட்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் - விஜய்

”டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? (எப்படி கோர்த்து விட்டேனா?)” எனக் கேட்டார்.

 • Share this:
  இயக்குநரிடம் தளபதி 65 அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயனின் ட்வீட் வைரலாகி வருகிறது.

  தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.  திரையரங்க உரிமையாளர்களுக்கு ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் கொடுத்த பரிசு!

  அப்போது படக்குழுவினருக்கு தளபதி 65 பட இயக்குநர் நெல்சன் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் இயக்குநரும் கூட. அதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், ”டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? (எப்படி கோர்த்து விட்டேனா?)” எனக் கேட்டார். அவரின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த நெல்சன், ”ஹா...ஹா.. அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா” என பதிவிட, ’ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது’ என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்திருந்தார்.

  சும்மா இருந்த விஜய் ரசிகர்களை அப்டேட் கேட்கச் சொல்லி தூண்டி விட்ட சிவகார்த்திகேயனின் ட்வீட், வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: