சிவகார்த்திகேயனின் அட்மின் செய்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தார் - நடிகர் சதீஷ்

சிவகார்த்திகேயனின் அட்மின் செய்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தார் -  நடிகர் சதீஷ்

சிவகார்த்திகேயன் உடன் சதீஷ்

நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயனின் ட்விட்டர் உரையாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவை நடிகர் சதீஷ் உடன் நட்பு பாராட்டி வருகிறார். மெரினா, எதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர்.லோக்கல் உள்ளிட்ட படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். திரைப்படங்கள் மட்டுமல்லாது பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இணைந்தாலும் நகைச்சுவை, நய்யாண்டி அடித்து கலக்குவார்கள்.

திரைக்கு பின்னும் நெருங்கிய நண்பர்களாக வலம் வரும் சதீஷூம் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் நட்ராஜன் உடன் வீடியோ காலில் பேசி இருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் மாறி மாறி பதிவிட்டிருக்கும் ட்வீட்டுகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

பிரபல தனியார் கல்லூரி அழகான ஆண்கள் வசிக்கும் பகுதி எது என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் நடிகர் சதீஷ். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “இந்த கருத்து கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதற்கு பின்னர் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் சென்னை முதலிடத்தைப் பெறவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்” என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் சதீஷ், “ரசிக, ரசிகைகள் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நண்பரது அட்மின் செய்தது என்றும், இனி இவ்வளவு வெளிப்படையாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம்” இவ்வாறு நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: