ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணையும் சிவகார்த்திகேயன்?... விஜய்க்கு சொன்ன கதையா?

ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணையும் சிவகார்த்திகேயன்?... விஜய்க்கு சொன்ன கதையா?

ஏ.ஆர்.முருகதாஸ் | சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் | சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு படங்களை தயாரித்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது அந்நிறுவனத்துக்கு நேரடியாக படம் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் இயக்க உள்ள அடுத்த படம் லைவ் ஆக்‌ஷன் ஸ்டைலில் உருவாக்கப்படும் அனிமேஷன் என்று கூறப்படுகிறது. இது அவரது இயக்கத்திலும் தமிழ் சினிமாவிலும் ஒரு புதுமுயற்சி.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கமர்ஷியல் கதையை சொன்னதாகவும் அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போனதாகவும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சொன்ன கதை தான் சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க: தாஜ்மஹாலில் நடக்கும் தனுஷ் பட ஷூட்டிங்

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் ‘மான்கராத்தே’ படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: A.R.murugadoss, Kollywood, Sivakarthikeyan