Sivaangi Krish : யூ-ட்யூபில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற சிவாங்கி!

Sivaangi Krish : யூ-ட்யூபில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற சிவாங்கி!

சிவாங்கி கிருஷ்ணகுமார்

அடிப்படையில் பாடகியான சிவாங்கிக்குள் நகைச்சுவையுணர்வு இருப்பதை வெளியில் கொண்டு வந்த பெருமை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியையே சாரும்.

  • Share this:
    குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி யூ-ட்யூபில் 1 மில்லியன் சப்ஸ்கிரபர்களைப் பெற்றுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    கலர்ஸ் தமிழின் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

    நிகழ்ச்சியில் வரும் கோமாளிகளும் ரசிகர்களிடம் படு பிரபலமாகியுள்ளனர். 2-ம் சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் கலந்துக் கொண்ட நிலையில், மதுரை முத்து, ஷகிலா, நிலையில் பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sivaangi (@sivaangi.krish)






    குறிப்பாக இதில் சிவாங்கிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. புகழுடன் சேர்ந்த்து அவர் செய்யும் ரகளை அதகளமாக இருக்கும். அடிப்படையில் பாடகியான சிவாங்கிக்குள் நகைச்சுவையுணர்வு இருப்பதை வெளியில் கொண்டு வந்த பெருமை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியையே சாரும்.

    தவிர யூ.ட்யூபில் சிவாங்கி கிருஷ்ணகுமார் என்ற சேனலை தொடங்கி அதன் மூலம் நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டு வந்த சிவாங்கிக்கு, தற்போது 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: