13 ஆண்டு பழைய புகைப்படத்தை பகிர்ந்த சித்தி-2 சீரியல் நடிகை

13 ஆண்டு பழைய புகைப்படத்தை பகிர்ந்த சித்தி-2 சீரியல் நடிகை

சித்தி-2

சித்தி 2 சீரியலில் நடிக்கும் பிரபல நடிகையான மீரா கிருஷ்ணாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  சினிமா பிரபலங்களுக்கு  ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பு சின்னத்திரை பிரபலங்களுக்கும் இருக்கிறது. தற்போது சினிமா பிரபலங்களை விட சீரியல் பிரபலங்களுக்கே மவுசு அதிகம் என்று கூறலாம். இத்தனை நாட்கள் சீரியல் பக்கம் திரும்பி பார்க்காதவர்கள் கூட இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் சீரியல் பிரியர்களாக மாறிவிட்டனர். அதிலும் 10 வருடங்களுக்கு முன்பு ஒளிப்பரப்பான, மக்களிடம் வரவேற்பை பெற்ற சீரியல்களும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

  அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான சித்தி சீரியல், சீரியல் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.இந்த சீரியலின் இரண்டாம் பாகமான சித்தி-2 சீரியல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. கிட்டத்திட்ட 19 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வந்தாலும் மக்களிடையே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

  இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார்,நிழல்கள் ரவி நடித்துள்ளனர்.ராதிகாவிற்கு வில்லியாக மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணா நடித்துவருகிறார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Meera Krishna (@meerakrishnaofficial)

  தற்போது மீரா கிருஷ்ணாவின் பழையப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மீரா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதில் ‘13 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்’என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: