5 பெண்களை மையமாக வைத்து நகரும் `சீதா ஆன் தி ரோட்’ - ட்ரைலர் வெளியீடு

5 பெண்களை மையமாக வைத்து நகரும் `சீதா ஆன் தி ரோட்’ - ட்ரைலர் வெளியீடு

படத்தின் போஸ்டர்

தெலுங்கில் `சீதா ஆன் தி ரோட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

  • Share this:
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களின் மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்புகள் எழுவது உண்டு. இதுவரை பல்வேறு மொழிகளிலும் வெளியான பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் அனைத்தும் மொழிகளைக் கடந்து வரவேற்புகளை பெற்றுள்ளது. அவ்வகையில் தற்போது தெலுங்கில் `சீதா ஆன் தி ரோட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஐந்து பெண்களின் வாழ்க்கைப் பயணம், பெண் சுதந்திரம், அவர்களின் கனவு மற்றும் அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிரனீத் யாரோன் என்ற இளம் இயக்குநர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையும் அவரே அமைத்துள்ளார். Zee plex-ல் இந்த திரைப்படம் வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. கல்பிகா கணேஷ், கதேரா ஹகிமி, காயத்ரி குப்தா, நேசா ஃபர்ஹதி மற்றும் உமா லிங்கையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரனூப் ஜவகர் மற்றும் பிரியங்கா ததி ஆகியோர் இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.சீதா ஆன் தி ரோட் திரைப்படத்தின் இயக்குநர் பிரனீத் இந்த திரைப்படம் தொடர்பாக பேசும்போது, ``இந்த திரைப்படம் சுயத்தை கண்டுபிடிப்பதற்கான பயணத்தையும் வாழ்க்கையில் பெண்கள் தங்களது ஆழ்மனதின் குரலை கேட்க முடிவு செய்தால் என்ன ஆகும் என்பதையும் பற்றி பேசுகிறது. இந்த கேள்விகளுக்கு 5 பெண்களின் வாழ்க்கை மூலம் பதிலளிக்கும் முயற்சிதான் இந்த திரைப்படம். பயணம் முடியும்போது சுதந்திரம் என்பதை பெண்கள் பார்வையில் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்துகொள்ளவும் இந்தப்படம் உதவுகிறது. இதுவரை மக்கள் காணாத சில பகுதிகளையும் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த இடங்கள் அனைத்தும் நான் பயணம் செய்த 40,000 கி.மீ-ல் இருந்து கண்டறியப்பட்டவை ஆகும்” என்றார்.
Published by:Ram Sankar
First published: