Home /News /entertainment /

தங்கைக்காக வாழ்க்கையை தொலைத்த அக்கா – வைரலாகும் சீரியல் புரோமோ

தங்கைக்காக வாழ்க்கையை தொலைத்த அக்கா – வைரலாகும் சீரியல் புரோமோ

Chippikul Muthu Serial | வழக்கமாக பல சீரியலில் மற்றும் திரைப்படங்களில் இருந்த அக்கா தங்கை கதை தான் சிப்பிக்குள் முத்து.

Chippikul Muthu Serial | வழக்கமாக பல சீரியலில் மற்றும் திரைப்படங்களில் இருந்த அக்கா தங்கை கதை தான் சிப்பிக்குள் முத்து.

Chippikul Muthu Serial | வழக்கமாக பல சீரியலில் மற்றும் திரைப்படங்களில் இருந்த அக்கா தங்கை கதை தான் சிப்பிக்குள் முத்து.

    பல சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ஹிட்டடித்தாலும், ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய சில வாரங்களிலேயே நிறுத்தப்பட்டு விடும். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சீரியலின் கதைக்களமோ அல்லது நடிகர்களோ இல்லையென்றால், டிஆர்பியிலேயே தெரிந்து விடும். அதே போல, ஒரு சில சீரியல்கள் ஹிட் ஆனாலும், பெரிய சொதப்பலாக மாறி, ரசிகர்களே டிரோல் செய்யும் அளவுக்கு மாறிவிடுகிறது. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா இப்போது டிரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.

    மேலும், வேறு சில சீரியல்களின் புரோமோ வெளியாகும் போதும், பார்வையாளர்கள் டிரோல் செய்யத் தயங்குவதில்லை. அதே போல, நல்ல சீரியல்களை  பார்வையாளர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், புதிதாய் ஒளிபரப்பாக இருக்கும் விஜய் டிவியின் சீரியல் புரோமோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. ஆனால், பாரதி கண்ணம்மா சீரியல் எந்த அளவுக்கு ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறதென்றால், புதிய சீரியலின் புரோமோவிலும் கூட, அதைப் பற்றி நக்கல் செய்தபடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    விஜய் டிவியின் புதிய சீரியலின் பெயர், சிப்பிக்குள் முத்து. வழக்கமாக பல சீரியலில் மற்றும் திரைப்படங்களில் இருந்த அக்கா தங்கை கதை தான் சிப்பிக்குள் முத்து. ஆனால், சீரியல் புரோமோவில் உள்ள காட்சிகள் கொஞ்சம் அதிர்ச்சி தரும்படியும் உள்ளன. அக்கா, அம்மாவாக இருந்து தங்கையை பொத்தி, பாதுகாத்து வளர்க்கும் கதை தான். ஆனால், தங்கை காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக்கொள்ளும் அக்காவின் கதை சிப்பிக்குள் முத்து.

    தங்கைக்கு அவள் காதலனை திருமணம் செய்து வைக்க வேண்டுமானால், அக்கா மன நலம் குன்றிய ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் கண்டிஷன். அதற்கு ஏற்றுக் கொண்ட அக்கா, மன நலம் குன்றியவரை திருமணம் செய்து கொண்டு, முதலிரவு அறையில் நுழையும் காட்சிகள் புரோமோவில் உள்ளன. அவரின் கணவன், என்னோட அம்மா தான் எனக்கு சாப்பாடு குடுப்பாங்க, நான் உன்ன அம்மான்னு கூப்பிடட்டா என்று கேட்கும் காட்சிகளும் உள்ளன. அதற்கு, நாயகி கண்கலங்கி இருக்கிறார்!



    இந்த சீரியல், ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தெலுங்கு சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. தமிழிலும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதே போல, புரோமோ வீடியோவில் பலரும், புரோமோவில் உள்ள காட்சிகள் ஈர்க்கும் படி இருக்கின்றன என்றும், சீரியல் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் பலரும் கமென்ட் செய்துள்ளனர்.
    Published by:Elakiya J
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி