ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சிறுத்தை சிவா... விரைவில் வெளியாகும் அண்ணாத்த ஷூட்டிங் அப்டேட்?

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சிறுத்தை சிவா... விரைவில் வெளியாகும் அண்ணாத்த ஷூட்டிங் அப்டேட்?

ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

  • Share this:
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேல் ராமமூர்த்தி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு சென்னையில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பினார். மேலும் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும் படி வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, 2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நட்சத்திர நடிகர் திட்டமிட்டிருந்ததாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன.

ரஜினிகாந்த்


இந்த நிலையில், தற்போது இயக்குனர் சிவா, ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தெரிகிறது. நவம்பர் மாதம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளதால், படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இயக்குனர் சிவா தற்போது ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: