குஷ்பு படத்தில் நடிகர்களான இரு பெரும் பாடகர்கள்!

குஷ்பு

விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  பிரபல பாடகர்கள் இருவரும் குஷ்புவின் படத்தில் நடிகர்களாகியிருக்கிறார்கள்.

  குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’. இதில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி பாடகர்கள் இருவர் அரண்மனை 3 படத்தில் நடிகர்களாகியிருக்கின்றனர். இந்தத் தகவலை நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் அரண்மனை 3 படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளனர். அதோடு அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு அந்த புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: