பாடகி சுனிதா மறுமணம் - தொழிலதிபரை மணந்தார்

பாடகி சுனிதா மறுமணம் - தொழிலதிபரை மணந்தார்

பாடகி சுனிதா மறுமணம்

செளந்தர்யா, சங்கவி, ரம்பா, பூமிகா, ரீமா சென், சினேகா, சதா, ஷ்ரேயா, நமிதா உள்ளிட்ட ஏராளமான நடிகைகளுக்கு நூற்றுக் கணக்கான படங்களில் டப்பிங் பேசியுள்ளார்.

 • Share this:
  பிரபல பாடகி சுனிதா உபத்ராஸ்தா, தொழிலதிபர் ராம கிருஷ்ண வீரபனேனியை சனிக்கிழமை மறுமணம் செய்திருக்கிறார்.

  பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா. இவர் தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் 'காதல் சொல்வது வார்த்தைகள் அல்ல’ என்ற பாடலை பாடி பிரபலமானார். இளையராஜவின் இசையில் ‘காதல் ரோஜாவே’ உள்ளிட்ட சில படங்களிலும் பாடி இருக்கிறார். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர், அங்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
  மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். செளந்தர்யா, சங்கவி, ரம்பா, பூமிகா, ரீமா சென், சினேகா, சதா, ஷ்ரேயா, நமிதா உள்ளிட்ட ஏராளமான நடிகைகளுக்கு நூற்றுக் கணக்கான படங்களில் டப்பிங் பேசியுள்ளார். ‘கீதா கோவிந்தம்’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் குரலாக ஒலித்ததும் சுனிதாவின் குரல் தான். 19 வயதிலேயே திருமணம் நடந்த அவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். 42 வயதாகும் சுனிதாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை மறுமணம் செய்திருக்கிறார் சுனிதா. இந்த திருமணத்தில் திரையுலகினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டனர். மனைவியை பிரிந்த ராம் வீரபனேனிக்கும் இது மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: