இசையமைப்பாளரான ஸ்வேதா மோகன் - 28 பாடகர்களுடன் யேசுதாஸுக்கு இசை மரியாதை
”மூத்த பாடகர்களுக்கு இசை மரியாதை தொகுப்பை உருவாக்கியிருந்தாலும், தாசமாமாவுக்கு (யேசுதாஸ்) முயற்சி செய்ய எனக்கு தைரியமே இல்லை.”

யேசுதாஸுடன் ஸ்வேதா மோகன்
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 4:56 PM IST
அம்மா சுஜாதாவை போலவே தேன் குரலுக்கு சொந்தக்காரர் ஸ்வேதா மோகன். தற்போது இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மூத்த பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு இசை மரியாதை செலுத்தும் வகையில் ஒரு வீடியோ பாடலுக்கு இசையமைத்துள்ளார் பாடகி ஸ்வேதா மோகன். ’காந்தர்வ காயகா’ என்ற தலைப்பிலான இந்த பாடலை மலையாளத்தில் 28 பாடகர்கள் பாடியுள்ளனர்.
இதுகுறித்து ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பேசியிருக்கும் ஸ்வேதா, “நான் சுசீலா அம்மா, ஜானகி அம்மா மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்காக இசை மரியாதை தொகுப்பை உருவாக்கியிருந்தாலும், தாசமாமாவுக்கு (யேசுதாஸ்) முயற்சி செய்ய எனக்கு தைரியமே இல்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக நாங்கள் செய்த வீடியோ உட்பட சில வீடியோக்களில், அவர்களின் பிரபலமான பாடல்களை நான் பாடியிருந்தேன். ஆனால் தாசமாமாவுக்கு, நான் ஒரு புதிய பாடலை இசையமைக்க விரும்பினேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
வீடியோவை ஒன்றாக இணைக்க தனக்கு இரண்டு மாதங்கள் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்வேதா. “ஹரிநாராயணன் ஒரு பிரபலமான மலையாள பாடலாசிரியர், நான் எனது விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, அந்த உணர்வுகளை அவர் சரியாக உள்வாங்கி, சரியான வார்தைகளால் கோர்த்து பாடலை தயார் செய்து விட்டார். ஐந்து நிமிடங்களில் பல்லவியை எனக்கு அனுப்பினார். அடுத்த ஒரு மணி நேரத்தில், சரணம் வந்தது, ஒரு நாளுக்குள், முழு பாடலுக்கான வரிகளும் வந்துவிட்டது” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பாடலை நடிகர் மோகன் லால், இயக்குநர் பிரியதர்ஷன், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் ட்விட்டரில் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை ஸ்வேதாவுக்கு தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Heartiest congratulations my dear Shweta ! What an amazing way to celebrate Das Anna’s birthday ! A beautiful composition my you sung by 28 singers !! Amazing !! @_ShwetaMohan_ @drkjyesudas https://t.co/8CLVd1y87L
— Shankar Mahadevan (@Shankar_Live) January 10, 2021