• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாக பிரபல பாடகர் கைது

பெண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாக பிரபல பாடகர் கைது

பாடகர் மிகா சிங்

பாடகர் மிகா சிங்

பாடகர் மிகா சிங் ஏற்கனவே இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு பொது மேடையில் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரேசிலைச் சேர்ந்த 17 வயது மாடல் பெண்ணுக்கு ஆபாசப் படங்களை செல்போன் மூலம் அனுப்பியதாக பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகராக இருக்கும் மிகா சிங் அபுதாபியில் நடைபெற்ற பாலிவுட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு நடந்த நள்ளிரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது மாடல் பெண்ணிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாடல் அழகி அபுதாபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாடகர் மிகா சிங்கை கைது செய்தனர்.

பாடகர் மிகா சிங் ஏற்கனவே இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு பொது மேடையில் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See.. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: