உயிரிழந்த செல்ல மகளின் நினைவாக பாடகி சித்ரா செய்த பெரும் உதவி

பாடகி சித்ரா

பிரபல பின்னணி பாடகி சித்ரா மறைந்த தனது மகள் நினைவாக கேன்சர் மருத்துவமனையில் கீமோ தெரபி பிரிவை சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரபல பின்னணி பாடகி சித்ரா, மறைந்த தனது மகள் நினைவாக கேன்சர் மருத்துவமனையில் கீமோ தெரபி பிரிவை சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.

  தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. தமிழில் மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர் மலையாளம், தெலுங்கு இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தனது பாடலுக்காக 6 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கணவர் விஜய சங்கர். இவர்களுக்கு நந்தனா என்ற ஒரே மகள் இருந்தார். 2011-ம் ஆண்டு சித்ரா துபாய் சென்றிருந்த போது அவரது மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

  தனது மகளின் மறைவையடுத்து மகள் நினைவாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. தற்போது கேரளாவின் பருமுலோவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில் கீமோ தெரபி சிகிச்சைப் பிரிவை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.

  இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சித்ரா தனது மகள் பற்றி பேசும் போது கண்கலங்கி கிறிஸ்தவப் பாடலைப் பாடி அங்கிருந்து விடைபெற்றார்.

  வைகுண்ட ஏகாதசிக்காக தயாராகும் லட்டுகள் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: