Home /News /entertainment /

"எனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள்" - பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல பாடகி!

"எனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள்" - பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல பாடகி!

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பாடகி சின்மயிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுவருவது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீப காலமாக பெண்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திரைத்துறையில் இருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரபலமாக உள்ள பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு சிறு வயதில் இருந்து தனது உறவினர்களால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தும், பணியிடங்களில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்தும் அவர் பதிவிட்டு வருகிறார்.

    மேலும், சமூக வலைதளத்தில் தன்னை பாலோ செய்யும் சில ரசிகர்கள் இன்பாக்சில் வந்து தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் விதமாக பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.











    சமீபத்தில் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ALSO READ...

    'காலா' வில்லன் பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை பகிரங்க குற்றச்சாட்டு

    'தனுஸ்ரீக்கு என் மகள் வயது’ - நானா படேகர் உருக்கம்!

    பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

    ALSO WATCH...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chinmayi has provoked, Chinmayi twitter page, Sexual harassment, Singer Chinmayi, Singer Chinmayi Twitter page

    அடுத்த செய்தி