Home /News /entertainment /

`சிம்டாங்காரன்’ பாடல் விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பதில்!

`சிம்டாங்காரன்’ பாடல் விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பதில்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

  • News18
  • Last Updated :
    `சிம்டாங்காரன்’ பாடல் மீதான விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

    நடிகர் விஜய் - இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி யோகிபாபு உள்ளிட்டொர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

    சிம்டாங்காரன் என்று தொடங்கும் பாடலை ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடலின் இந்த வரி குறித்து விளக்கமளித்த பாடலாசிரியர், சிம்டாங்காரன் என்றால் ,கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று கூறினார். மேலும், ``கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே. அந்த ஒருவன். நம் சிம்டாங்காரன்” என்றும் கூறியிருந்தார்.

    இந்தப் பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனினும் இந்தப் பாடலை கேட்க கேட்க பிடிக்கும் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்டாங்காரன் பாடல் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார். அதில், ``விமர்சனங்கள் என் இசை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் என் அனுபவம் காரணமாக மக்களின் கருத்துக்களை நான் கணித்து விடுவேன். சில சமயங்களில் அவர்களுடைய விமர்சனமும் பாராட்டும் என்னை ஆச்சர்யப்படுத்தும். ஒரு படத்தின் இயக்குநர், கதாநாயகன், நடன் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் கேட்ட பிறகே ஒரு பாடல் வெளிவருகிறது. இதன் மூலம் ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது”என்று கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: A.R.Rahman, Actor vijay, Sarkar, Sarkar songs, Simtangaran

    அடுத்த செய்தி