கணவருடன் நடித்த சிம்ரன்- ட்ரெய்லர் வெளியீடு (வீடியோ)

news18
Updated: August 6, 2018, 6:34 PM IST
கணவருடன் நடித்த சிம்ரன்- ட்ரெய்லர் வெளியீடு (வீடியோ)
சிம்ரன் மற்றும் அவரது கணவர் தீபக் பக்கா
news18
Updated: August 6, 2018, 6:34 PM IST
நடிகை சிம்ரன் தனது கணவருடன் நடித்துள்ள ’ஓடு ராஜா ஓடு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் அஜித், விஜய், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு அதிகம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் சிம்ரன் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'ஓடு ராஜா ஓடு' படத்தில் சிம்ரனின் கணவர் தீபக்  நடிகராக அறிமுகமாகியுள்ளார் இப்படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐந்து வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் சந்திப்பதை மையமாகக் கொண்டு பிளாக் ஹியூமர் ஜானரில் உருவாகியுள்ளது ‘ஓடு ராஜா ஓடு’ திரைப்படம். குரு சோமசுந்தரம், லட்மி ப்ரியா ஜோடி சேர்ந்து நடிக்க நாசர், ஆனந்த் சாமி, ஆஷிகா சல்வான், ரவீந்திர விஜய், அபிஷேக், நவீன் பவுல் ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் நிஷாந்த், ஜத்தின் இணைந்து இயக்கியுள்ளனர். விஜய் மூலன் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இப்படத்தை கேண்டில் லைட் நிறுவனம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடுகிறது.

First published: August 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்