சிம்மராசி பட இயக்குநர் உடல்நலக்குறைவால் மரணம்

சிம்மராசி பட இயக்குநர் உடல்நலக்குறைவால் மரணம்

இயக்குநர் ஈரோடு சௌந்தர்

பிரபல சினிமா எழுத்தாளரும், இயக்குநருமான ஈரோடு சௌந்தர் காலமானார். அவருக்கு வயது 62.

  • Share this:
சிம்மராசி, முதல் சீதனம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஈரோடு சௌந்தர். இயக்குநர் மட்டுமின்றி சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, படத்தின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தின் வசனத்துக்காகவும் இவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது. கடந்த ஆண்டு தனது பேரன் கபிலேஷை நாயகனாகவும் தனது தம்பி மகன் பாலசபரீஸ்வரனை வில்லனாகவும் அறிமுகப்படுத்தி ‘உள்ளேன் அய்யா’ என்ற படத்தை இயக்கினார் ஈரோடு சவுந்தர். இந்தப் படம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, அவர்களது எதிர்கால குறிக்கோள் குறித்த எண்ணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

62 வயதாகும் இயக்குநர் சௌந்தருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி ஈரோடு சௌந்தர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க: சிங்கக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுத்து மகிழும் பிரபல நடிகை - லைக்ஸ் அள்ளும் வீடியோ

ஈரோடு அருகே உள்ள முள்ளம்பரப்பு என்ற கிராமத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு குடும்பத்தாரிடையேயும், திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: