தள்ளிப்போகும் சிம்புவின் மாநாடு ஷுட்டிங்!

பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவுடன் சிம்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது.

இந்தப் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்த சிம்பு, தனது சகோதரரின் திருமணத்துக்காக சென்னை திரும்பினார். அப்போது அவரைச் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.ஆனால் படப்பிடிப்பு இடங்கள் இன்னும் இறுதியாகாததால் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜூன் 21-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அடுத்து முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு.

வீடியோ பார்க்க: லிசா படத்தின் ரகசியத்தை உடைத்த நடிகை அஞ்சலி!

Published by:Sheik Hanifah
First published: